வர்த்தக கர்த்தராக நியமிக்கப்பட்டார். அவர் குற்றால மலையின் செழுமையைக் கண்டு அங்குத் தோட்டப்பயிர் செய்யத் தொடங்கினார். அவர் பெயரால் அமைந்த சிற்றூர் காசாமேசர்புரம் என்று பெயர் பெற்று, இப்பொழுது காசிமேசபுரம் என்று வழங்குகின்றது. ‘பொன் இலஞ்சி’ யென்றும், ‘மீறும் இலஞ்சி’ யென்றும் குறவஞ்சிக் கவிராயரால் சிறப்பிக்கப்பட்ட சிற்றூர் செல்வம் மலிந்த சீருராய்த் தென்காசியின் அருகே திகழ்கின்றது. |