பக்கம் எண் :

காவிய இன்பம்77

அரசனுடைய     மைந்தன்;  அஞ்சன   வண்ணன்;      செந்தாமரைக்
கண்ணன்;  அவன்,    தம்பியோடும்   முனிவரோடும்  நம் மாளிகைக்கு
வந்தான்;  உன்   திருமணத்திற்காக வைத்திருந்த  வில்லைக் கண்டான்;
எடுத்தான்; வளைத்தான்; ஒடித்தான்” என்று கூறி முடிக்கின்றாள்.

அப்பொழுது   சீதையின் மனம் ஊசலாடத் தொடங்கிற்று; கவலையும்
உண்டாயிற்று. வில்லை  எடுத்து  வளைத்து ஒடித்த வீரன், தான் கன்னி
மாடத்திலிருந்து   கண்ட   ஆடவனோ?   அல்லனோ?  என்ற  ஐயம்
பிறந்தது.   அவனாகத்தான்    இருக்க    வேண்டு  மென்று  ஒருவாறு
மனத்தைத்  தேற்றிக்கொண்டு,   தோழி   சொல்லிய அடையாளங்களை
மீளவும் நினைத்துப் பார்த்தாள்.

“கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின்
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையினால்
ஆம்அவ னேகொல்என்று ஐயம் நீங்கினாள்.”

ஆனால்,     நொடிப்பொழுதில்   மற்றொரு  கருத்து அவள் மனத்தில்
புகுந்தது.  “என் தோழி சொல்லிய   அடையாளங்கள் எல்லாம் உடைய
மற்றொருவன்   வில்லை  வளைத்து    ஒடித்திருந்தால்   நான்  என்ன
செய்வேன்?” என்று அவள் எண்ணினாள்; ஏங்கினாள்.

அந்த      ஏக்கத்தினிடையே     ஓர்     ஊக்கம்      பிறந்தது;
உணர்ச்சியினிடையே     ஒழுக்கம்     எழுந்தது.    காதல்    கற்பாக
உருவெடுத்தது.   “அவன்  அல்லனேல் இறப்பேன்” என்று சீதை முடிவு
செய்தாள். கண்ணாற் கண்ட காதலனும் வில்லை ஒடித்த வீரனும்