புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” | (கலித்.135) |
என்று கலித்தொகை கூறுகின்றது. இதனால், கடல்கோளால் நாடிழந்தவன் பாண்டியனே என்பதும், அதற்கீடாக அவன் சேரசோழ நாடுகளின் பகுதி களைக் கைப்பற்றினான் என்பதும் அறியப்படும். இதையே, “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண் டூர்க் கூற்றமு மென்னுமிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்”1 என்று, அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். தென்னாட்டைக் கடல்கொண்டமைக்குக் காரணம், முன்னொரு காலத்தில் பாண்டியன் அதன்மீது வேலெறிந்த செயலாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது. இந்திரன் ஒருமுறை மதுரைமீது கடலை விட்டதாகவும், அப்போது ஆண்டுகொண்டிருந்த உக்கிரகுமார பாண்டியன் ஒரு வேலை யெறிந்து அக்கடலை வற்றச் செய்ததாகவும், திரு விளையாடற் புராணத்தில் 'கடல்சுவற வேல்விட்ட படலம்' கூறுகின்றது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனின், ஒருமுறை நிலநடுக்கத்தால் கீழ் கடலிலிருந்து ஒரு பேரலை மதுரை வந்து மீண்டதென்பதே. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பல நிலநடுக்க வரலாறுகளினின்று அறிகின் றோம். உவாலேஸ் (Wallace) என்பவர் தாம் உவைகியௌ (Waigiou) தீவிலிருந்து தெர்னேற்றுத் (Temate) தீவிற்குப் போகும் வழியில், நிலநடுக்கத்தால் கடன் மட்டம் உயர்ந்த தாகக் குறிப்பிடுகின்றார்.2 தென்னாட்டில் நிகழ்ந்த பல கடல்கோள்களில், ஒன்று பஃறுளியாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரியாற்றுக்குத் தெற் கில் ஓர் எல்லை வரையுள்ள நிலத்தைக் கொண்டதென்றும், இன்னொன்று குமரியாற்றையும் அதற்குத் தெற்கிலும் வடக்கி லுமிருந்த நிலத்தையும் கொண்டதென்றும் தெரியவருகின்றது. பஃறுளிநாட்டை யிழந்த பாண்டியன், தொல்காப்பியப் பாயிரத்தில் “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்றும் மதுரைக்
1. சிலப். பக். 303 2. The Malay Archipelago, p. 412
|