பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்121

காஞ்சியில், 'நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்' என்றும், புறநானூற்றில் 'நெடியோன்' என்றும் கூறப்படுபவன் ஆவன். முந்தின இருபெயர்களின் பொரு ளும், “மலிதிரை யூர்ந்து” என்னுங் கலித்தொகைச் செய்யுட் செய்திக்கு ஒத்திருத்தல் காண்க.

குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப் பக்கத் துள்ள நிலக் கோடி குமரிமுனை யென்னப்படுகிறது.

கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதி காரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப்பின், குமரியாற்றைக் கடல்கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதினால், 'தொடி யோள் பௌவமும்'1 என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது.

'தொடியோள் பௌவம்' என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது :

“தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்ப தாயிற்று. ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெய ராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தி யனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவ ருள்ளிட்ட, நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீ இயினார். காய்சினவழுதிமுதற் கடுங்கோனீறாயுள்ளார் எண் பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர்; பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயி னான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும்


1. சிலப். ப.