பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 17

15

15. தமிழற்ற வரசு தன்னரசோ?

‘கலிலோ' என்ற மெட்டு

 

ப.

 
     
  தமிழா செந்தமி ழறவருவது தானொரு தன்னரசோ  
  தனையுணராத் தமிழா.  
     
 

து. ப.

 
     
  அமிழாதுன் அருமொழியதனை அரவணையிது தருணம் அசதியுள  
   

(தமிழா)

 

உ.

 
     
   1. சமமான குடியர செதுமொரு தாய்மொழியதில் நிகழும்  
  சகமெங்கும் தாய்மொழி யுயிரெனத் தழுவியதனைப் புகழும்  
  தமிழ்நாடே பகைமொழி சிரமேல் தாங்கித் தமிழையிகழும்  
 

தவமகிழும்

(தமிழா)

     
   2. கலைவாயில் தமிழெனில் அதில்ஒரு கடுகதுமிலை பயனே  
  கருத்தாக மாணவர் தமிழிலே கற்பரோ இலக்கியமே  
  அலுவல்கள் தருமொழியதுதான் அன்பொடு பரிசயமே  
 

அதன் வயமே

(தமிழா)

16. தமிழரின் அடிமைத்தன்மை

'சரவணபவ' என்ற மெட்டு

ப.

 
   
   அடிமைத் தமிழா அடை விடுதலை  
   

து. ப.

 
   
   மடிமை யதில்தன் மகிமை யறியா  
   மாற்றவர்க்குச் சேவை ஆற்றிக்கெட்டுச் சாவை

(அடிமைத்)

   

உ.

 
   
   தேசமுங் கல்வியும் திருவும் குலமும்  
   பேசும் நாகரிகம் பிறவும் தாய்மொழி  
   ஏசவே தமிழை இழந்து பெறூஉம்  
   இம்மைப் பேறுமுண்டோ செம்மையா கக்கண்டால்

(அடிமைத்)