பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 25

கவ
   கவிமயக் கிறையே கலைக்கோட்டுத் தண்டு
   கால கேசியுடன் காக்கை பாடினியம்
   குண்டல கேசி குணநூல் கோள்நூலே
   சங்க யாப்போடு சயந்தமே சிந்தம்
   சச்சபுட வெண்பா சாதவா கனமே
   சிறுகாக்கை பாடினியம் செய்யு ளியலோடு
   சுத்தானந் தப்பிர காசமே பன்னும்
   செயன்முறை செயிற்றியம் செந்தமி ழான
   செஞ்சிக் கலம்பகம் தும்பிப் பாட்டோடு
   தகடூர் யாத்திரையே தாள சமுத்ரம்
   தாள வகையியல் தேசிக மாலை
   நீலகேசி பஞ்ச பாரதீயம் பரதம்
 
   பஞ்ச மரபுடன் பரதசேனா பதியம்
   பல்காயம் அந்தாதி பன்மணி மாலை
 
   பன்னிரு படலம் பாலைப்பாட் டுடனே
   பாட்டியன் மரபு பாரதம் பரிநூல்
 
   புணர்ப்பாலை புதையல் புராண சாகரமே
   பெரிய ப்ரம்மம் பெருவல்ல மேநல்ல
 
   பொய்கையார் நூலோடு போக்கியம் என்றே
   மணியாரம் மந்திரநூல் மயேச்சுரர் யாப்பே
 
   மதிவாணர் நாடகத் தமிழ்நூலே பின்னும்
   மார்க்கண்டேயர் காஞ்சி முறுவல் சிறந்த
 
   முத்தொள்ளா யிரமே மூப்பெட்டுச் செய்யுள்
   வளையாபதி வாய்ப்பியம் விளக்கத்தார் கூத்தே
   இவையாதி யெண்ணற்ற இருந்தமிழ் நூல்கள்.                     (ஏல)