பக்கம் எண் :

28செந்தமிழ்க் காஞ்சி

28

28. தமிழ்ப் பண்டிதர் தமிழைக் காக்க அஞ்சுதல்

'மாடு மேய்க்கும் கண்ணே' என்ற மெட்டு

 

ப.

 
     
  முன்னோர்பிர தாபம் - நாம்  
  சொன்னாலுமோ பாபம்  
     
 

உ.

 
     
   1. ஏனைநா டெல்லாம்அக இருளில் இருந்தபோது  
  வானேரும் நாகரிகம் வண்டமிழர் கண்டாரென்றே

(முன்)

     
   2. ஆரியர் வருமுன்னமே அரியகலை கள்பல  
  அறிந்திருந்தார் தமிழர் ஆராய்ந்தறிவாய் என்றே

(முன்)

     
   3. வடமொழித் துணையின்றியே வளரவல் லதுதமிழ்  
  திடமுளதென் சொற்களும் தேவமொழி யுளவென்றே

(முன்)

     
   4. கட்டாய மாகும்இந்திக் கல்வியி னாலேதமிழ்  
  கெட்டே விடும்வரவே ஒட்டோம் இந்தியை என்றே

(முன்)

     
   5. தமிழைத்தற் காத்திடவும் தற்சமயம் முட்டாமானம்  
  தமிழைத்தான் பேசவும்ஓர் தட்டொருகால் வந்திடுமோ

(முன்)

29. ஜாதி வித்தியாசம் மனிதன் கட்டுப்பாடு

'சுருளிமலை மீதுலவும் சீலா' என்ற மெட்டு

   1. ஜாதிவித்தி யாசம்என்ற நாமம் - இந்தச்
  சம்புத்தீவி லேதான்சுக க்ஷேமம் - இதைத்
  தாண்டியொரு தேசஞ் சென்றால்
  தாழ்வுயர்வு நாகரிகத் தாலே - வரும்பாலே
   
   2. ஜாதிகளைப் பிரமாவே படைத்தார் - என்றால்
  சம்புத் தீவிற்குள் ஏன்தம்மை அடைத்தார் - இந்தத்
  தாரணியில் ஒரு நாட்டில்
  தாமே பிரிவினை செய்யின் தலையோ - நடுநிலையோ