3. |
நிறத்திற்
சிறந்தவரே மேலோர் - என்று |
|
நிறுவினால்
குஷ்டர்உயர் பாலோர் - இந்த |
|
நீணிலத்தில்
தட்பவெப்ப |
|
நிலையினா
லாகுமைந்து நிறமே - பல திறமே |
|
|
4. |
மாரிலே
நூலணிவதன் பெருமை - இந்து |
|
மாநிலத்தில்
பல்குலத்திற் குரிமை - புது |
|
மனை கட்டும்போது
செங்கல் |
|
எடைகட்டும்
சுற்றுவது நூலே - தவிர்மாலே. |
|
|
5. |
பார்ப்பனி வயிற்றில்ஒரு
மகனும் - ஒரு |
|
பறைச்சி வயிற்றில்ஒரு
மகனும் - வரப் |
|
பழவினை காரணமோ |
|
மணவினையால்
கருவுறாதோ - பிறக்காதோ. |
|
|
6. |
சந்திர சூரியரென்றே
சுடரும் - எல்லாச் |
|
சாதிகட்கும் ஒன்றாய்
வானம் படரும் - மிகச் |
|
சாடுகின்ற காற்றுமழை |
|
சாதிக்கொரு வேற்றுமையோ
சாற்றும் - எந்தவாற்றும் |
|
|
7. |
எழுவகை யானஉடல் தாது
- ஒன்றாய் |
|
இருக்குமெல்
லாருக்குமென் றோது - மிக |
|
இழிந்துயர் குலங்களாய் |
|
இருபாலுங் கூடி வாழ
இசையும் - இல்லை வசையும். |