பக்கம் எண் :

30செந்தமிழ்க் காஞ்சி

2
   2. கட்டாய மாமிந்திக் கல்வியி னால்தமிழ்
  கெட்டுவிடும் விடாதென்று கிளந்திட
  உற்றவர் பண்டிதரே அவரை
  மெத்தென எண்ண வேண்டா
  தமிழறி யாதவர் சொல்லுவதைத்
  தான்பிர மாணமாய்க் கொள்ளுவதோ
  தமிழையுந் தள்ளுவதோ.

31. ஒரு பாஷையால் ஒற்றுமையுண்டாகாமை

'ராம பஜனக் கோரியாம்' என்ற மெட்டு

 

ப.

 
     
  பாஷையால் ஒற்றுமையாமோ - பகையும் போமோ.  
     
 

உ.

 
     
   1. ஆங்கிலர் அமெரிக்கர் அனைமொழி ஒன்றானாலும்  
  நீங்கியே நெடும்பகையை நிகழ்த்துகின்றார்

(பாஷை)

     
   2. விடுதலை விருப்பமே வேற்றுமை யறுத்தது  
  வேறொன்று மில்லை அறிவீர் - விவேகம் கொள்வீர்

(பாஷை)

     
   3. ஊண்மண சம்பந்தமே உண்டாயின் இன்றே நம்மில்  
  ஒற்றுமை உண்டாய்விடும் - உம் ஐயம் விடும்

(பாஷை)

     
   4. என்மொழி முன்னோர்மொழி எனவட மொழிக்கிளை  
  இந்தியைப் புகுத்துவோரே - எண்ணும் பிறரை

(பாஷை)

     
   5. இந்தியால் ஒற்றுமையேல் ஏன்முனே சொற்றதில்லை  
  மந்திரியா கும்வரையும் மறைத்து வைத்தார்.

(பாஷை)

32. தாய்மொழியில் அரசே தன்னரசு

(சுயராஜியம்)

'பண்டித மோத்திலால் நேரை' என்ற மெட்டு

ப.

 
   தாய்மொழியில் இல்லாவரசும் தன்னர சாமோ
   தன்னர சாமோ அது பின்னமாய்ச் சாமோ
   ஏய்மொழியினால் இவ்வரை ஏமாற்றினர் எம்மவரை
   இன்று திடுமென்றே இந்தியிங் கிருத்துகின் றாரே
   இருத்துகின் றாரேஎமை வருத்தநின் றாரே.