ப. |
|
தமிழ்நாட்டுப்
பணங்காசும் வடநாட்டு மணம்வீசும் |
தமிழ்நாட்ட
மனங்கூசும் வடசொல் நாட்டத் தினம்பேசும் |
|
உரைப்பாட்டு |
|
சீரான
மொழிகளிலே சிறந்த மொழியான செந்தமிழையே |
தளர்த்துவந்து |
ஈராயிரம் ஆண்டுகளாய்
இந்நாட்டுப் பணத்தாலே இறந்த |
மொழியை வளர்த்துவந்து. |
|
ப. |
|
கட்டாய மாக
இந்திக் கல்வி நுழைக்க முந்தி |
விட்டார் தமிழைச்
சந்தி விரைவி லதற்குக் காலம் அந்தி |
|
உரைப்பாட்டு |
|
பத்திரம்நூல்
பூஜைமணம் பத்தினாக சடங்குரையாம் |
பலவிதத்தும்
வடமொழியைப் பெய்தார் |
இத்தமிழ்நாட்
டெல்லைதனில் இந்தியையும் புகுத்தவின்று |
ஏகோபித்தே
கிளர்ச்சி செய்தார். |
தாய்நாடே
போற்றி! தமிழ்நாடே போற்றி! தமிழே போற்றி! |
தொல்காப்பியர்க்கு
வெற்றி! திருவள்ளுவர்க்கு வெற்றி! மாணிக்க |
வாசகர்க்கு வெற்றி!
கம்பருக்கு வெற்றி! |