ப. |
|
|
|
பாழானதே
என்வாழ்வு பண்ணாருந் தமிழே |
|
ஏழாங்
கடையிலும்என் எண்ணம் நீர்க்குமிழே. |
|
|
|
து. ப. |
|
|
|
தாழாத
பணியெனுந் தாளாண்மை யுழவே |
|
வாழாது
கழிந்ததென் வாளாண்மை மழவே |
(பாழா) |
|
|
உ. 1 |
|
|
|
செப்படி
மயக்கமே செய்கலையும் - மிகச் |
|
சேணுயர்
கழைக்கூத்துந் தெரிந்தோ மில்லை |
|
தப்பிய
மகளிராய்ப் பிறந்தோ மில்லை - செல்வத் |
|
தையலார்
குற்றவேலுஞ் செய்தோ மில்லை |
(பாழா) |
|
|
2 |
|
|
|
மூவேந்த
ரொடுவேளிர் முதுகுமணன் - கொடை |
|
முதிர்ந்த
நல்லியக்கோடன் முனம்மறைந்தார் |
|
ஈவேந்தன்
சீதக்காதி இரகுநாதன் பின்னே |
|
இலவம்
பஞ்சே தமிழ்ப்புலவ ரெல்லாம் |
(பாழா) |
|
|
3 |
|
|
|
பிள்ளைப் பாண்டியனொடு வில்லி யில்லை - பிழை |
|
பேணாத
சாத்தனொடு கூத்த னில்லை |
|
கள்ளத்
தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று |
|
காட்டிக்
கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை |
(பாழா) |