பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 53

8

8

 
   ஊர்தோறும்பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும்
   நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையாயிருந் தாலும்
   நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆய்ந்ததமிழ் நைய
   நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கிவரின் நன்றோ?
 

9

 
   கற்றோருடன் மற்றோரெலாங் கண்ணிய பணியாற்பெரு வருவாய்
   வற்றாநல வாழ்விற்பெறும் இன்பமே வழிவழியுற் றாலும்
   பொற்றாமரைக் குளமேற்சிவப் புங்கவன் ஆய்ந்ததமிழ் நைய
   முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகிவரின் நன்றோ?
 

10

 
   பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம்
   மலைபோற்குவி நல்கைமகிழ் கூரவே மதிதோறுமுற் றாலும்
   கலகலென வொலிக்குங்கழற் கண்ணுளன் ஆய்ந்ததமிழ் நையக்
   கலகம்விளை இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ?

19. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை

'ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே' என்ற மெட்டு

ப.

 
   
   தமிழனே இன்றும் தாய்மொழி பேணாதவன்  
   இமிழ்கடல் உலகினில் இவனுக்கோ ரிணையுண்டோ?

(தமிழனே)

   

உ. 1

 
   
   தாயென மேலாய்த் தன்னைத் தாங்கிவளர்த் திருந்தும்  
   நாயினுங் கீழாய் அதை நடத்தமனம் பொருந்தும்

(தமிழனே)

   

2

 
   
   ஆழ்ந்துகற் றாய்ந்தபின்னும் அமுதச் சோறென்னுஞ் சொல்லும்  
   தாழ்ந்தவர் சொல்லென்றின்னும் தள்ளவே மனம் ஒல்லும்

(தமிழனே)