பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 55

2

2

 
   
   தன்வீட் டுள்ள நெருப்பும்  
      தப்பா மற்சுடும் தொடினே  
   தன்னாட் டுளதே யென்றோர் கட்சி  
      தழுவின் தீயது தீங்காகும்  
   பின்னாட் கேஅது தெரிந்தால்  
      பிரிந்தே விடவேண்டும்  
   தன்கேட்டைத் தான்தேடின்  
      தடுப்பார் யாருமில்லை

(இருப்ப)

   

3

 
   
   உரிமை யெல்லாம் இழந்தால் - பின்  
      உலக வாழ்வும் எதற்கே  
   உரிமை யென்றே அடிமைத் தனத்தை  
      உரைத்தால் உரிமை யாகாது  
   இருமொழியாம் கொள்கை யிங்கே  
      என்றும் நிலவுகவே  
   இருமொழியும் தேர்ச்சி பெற்றால்  
      எங்கும் அதுபோதும்

(இருப்ப)

21. செந்தமிழே தமிழன் செல்வம்

இசைந்த மெட்டிற் பாடுக

ப.

 
   
   செந்தமிழ் ஒன்றேநம் செல்வம்  
   சேர்ந்தது கொண்டேமுன் செல்வம்  
   

து. ப.

 
   
   வந்தெதிர் பகையைநாம் வெல்வம்  
   வையமெல்லாம் ஓர்இனம் சொல்வம்

(செந்தமிழ்)

   

உ.

 
   
   முந்திய தமிழின்முறை யுள்வம்  
   மூதுல கெங்கும்இது தெள்வம்  
   இந்தியி னாட்சிதான் தள்வம்  
   எவ்வகை மொழியும்நாம் கொள்வம்

(செந்தமிழ்)