பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 7

4

4. செந்தமிழ்ச் சிறப்பு

'மருவே செறித்த' என்ற திருப்புகழ் மெட்டு

தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற

வண்ணம்

   தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது
   தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக
   முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி
   முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே
   கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன் மகவோரே
   கவலா திருந்து வௌமீ தெறிந்து கறையா னருந்த விடலானார்
   பனிலாரி வந்து பலகா லெழுந்து பலவா யிருந்த நினவாய
   கலைவாரி யிந்த நிலையாக விண்டு முலவா திருந்த கனியாளே!

5. தமிழின் பெருமை

'மாற்றறி யாத செழும்பசும் பொன்னே' என்ற மெட்டு

   1. தோற்ற மறிவராத் தொல்பெருந் தமிழே
  துணையொன்றும் வேண்டாத தூயசெந் தமிழே
   
  மாற்ற மெளியவாய் மன்னிய தமிழே
  மறைந்த லெமூரியா நிறைந்தசெந் தமிழே
   
  போற்று முதனூல்கள் பொருந்திய தமிழே
  பூமியெங் கும்புடை போகிய தமிழே
   
  கூற்ற மெனக்கடல் குணிப்பருங் கலைகள்
  கொள்ளை கொண்டும்வளம் கொண்டதோர் தமிழே.
   
   2. சேயரும் எளிமையாய்ச் செப்பிடுந் தமிழே
  செம்பொருள் கொண்டதோர் சீரிய தமிழே
   
  தூய ஞானந்தரும் தத்துவத் தமிழே
  தரணியெல் லாம்புகழ் தாங்கிய தமிழே
   
  பாயும் விடையான் பாடிய தமிழே
  பாய்சுருட்ட மாலைப் பண்ணிய தமிழே
   
  மாயுந் தமிழ்மக்கள் மடமொடு கடலே
  மாய்த்திடக் கலைநூல்கள் மங்கிய தமிழே