பக்கம் எண் :

8செந்தமிழ்க் காஞ்சி

3
  3. பாவகை விரிந்தியல் பண்டைமுத் தமிழே
  பண்ணொடு பொருந்திய பண்பட்ட தமிழே
   
  தேவியல் முனிவரும் தேர்ந்துரை தமிழே
  திருந்திய இலக்கணத் திவ்வியத் தமிழே
   
  யாவரும் போற்றிடும் தீவிய தமிழே
  யவனமுஞ் சென்று வயங்கிய தமிழே
   
  கூவுங் குயில்கிள்ளை குழலொடு யாழே
  கொஞ்சும் மழலையினும் விஞ்சுதீந் தமிழே!

6. தமிழ்நாடு

'சத்யமெங்குமே தளரா நாடு' என்ற மெட்டு

   தாரணி யிலுயர் தமிழ்நாடு திருத் தாண்ட வம்புரி கற்பகக் காடு
   ஆரண முனிவர் மலைக்கோடு அதை அடைந்த வர்க்கும் பேரின்ப வீடு
 

2

 
   பொன்னும் மணியும் விளையும் நாடு ஞானப் பொற்புடன் சாலமோன் புகழ்நாடு
   கன்னலொடு செந்நெல் வளர்நாடு பல கற்ப காலமாய் விளங்கும் நாடு
 

3

 
   காவிய மிகுந்த கலைநாடு பண்டே கடல் வாணிகம் புரிந்த நாடு
   ஓவிய மிகுந்த திருநாடு மிக உன்னத கோபுர முள்ள நாடு.
 

4

 
   நாகரிகமே மிகுந்த நாடு மிக நடுநிலை யான தமிழ்நாடு
   ஏகமனமா யிருந்த நாடு மிக ஏதிலரை ஆதரித்த நாடு
 

5

 
   வள்ளுவன் பிறந்த திருநாடு பெரு வள்ளல்கள் திகழ்ந்த பெருநாடு
   மள்ளர் நடுகல்லி லுள்ளநாடு ஒரு மாத மூன்றுமழை பெய்தநாடு
 

6

 
   கம்பனும் பிறந்த தமிழ்நாடு கடுங் காள மேகமும் பிறந்தநாடு
   நம்ப னடியார்க்கு விளையாடித் திரு நடனமைந்து மன்று புரிநாடு