பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 9

7

7

 
   பாவினிற் சிறந்த தமிழ்நாடு நெடும் பாபிலோ னுறவு கொண்டநாடு
   காவலர் உயர்ந்த திருநாடு பெருங் கற்ப ரசிகள் திகழ்ந்தநாடு
 

8

 
   முத்தமிழ் முதல்வளர்ந்த நாடு மோன முத்தர்க ளிருந்த திருநாடு
   சித்தர்க ளிருந்த திருநாடு மிகச் செத்தவர் பிழைத்த திருநாடு
 

9

 
   காணாமலே நட்ட திருநாடு நண்பர் கட்டை யேறிவிட்ட திருநாடு
   கோணாமல் கரும்பு தின்னநீடு பெருங் கூலியுங் கொடுத்த வளநாடு
 

10

 
   வேளாண்மை சிறந்த தமிழ்நாடு மிக விருந்தினரைப் பேணியநாடு
   தாளாண்மை சிறந்த தமிழ்நாடு எழு தண்ணீருங் கடந்த தமிழ்நாடு
 

11

 
   நன்றி யறிவுள்ள திருநாடு பல நாவலர் திகழ்ந்த பெருநாடு
   தஞ்சமென்று சொல்லிய பிற்பாடு மிகத் தன்னுட லுந்தந்த தமிழ்நாடு
 

12

 
   மைந்தனையுங்கொன்ற நீதிநாடு பாண்டி மன்னவன் தன்கை குறைத்த நாடு
   ஐந்தனையும் வென்ற தமிழ்நாடு பல அருஞ்செயல் புரிந்த தமிழ்நாடு
 

13

 
   நாயன்மார் பிறந்த தமிழ்நாடு மூன்று நால்வராம் ஆழ்வார் பிறந்த நாடு
   சீயமா இராமன் சீதையோடு வந்து சீரிய துணைபெற்ற திருநாடு