1. |
வண்ணாத்திப்
பூச்சியே! |
|
வர்ணமிட்ட
பூச்சியே! |
|
கண்ணோக்க
நேர்த்தியாம் |
|
காட்சியான
பூச்சியே! |
|
|
|
கவனித்தல் |
|
|
2. |
விசிறிபோல வீசுவாய் |
|
விரைந்தென்
கையில் சேருவாய் |
|
விசிறவேண்டா
நோகுமே |
|
வேடிக்கைநான்
பார்க்கிறேன். |
|
|
|
பூச்சி
தூரமாய்ப் போகுதல் |
|
|
3. |
அதிக தூரம்
போய்மலர் |
|
அதிலே
தேனைக் குடிப்பாயே |
|
மெதுவாய்ப் பின்னா லேவந்து |
|
மேவிக்
கையில் பிடிக்கிறேன். |
|
|
|
பூச்சி
உயரப் பறந்து போகுதல் |
|
|
4. |
மேலே மேலே
போயினும் |
|
மிகுந்த
வரையில் குதித்துநான் |
|
சீலை
யாலே யுன்னையே |
|
சேர்த்துப்
பிடிக்கி றேன்இதோ! |