பக்கம் எண் :

80செந்தமிழ்க் காஞ்சி

9ஆம

9ஆம் பாடம்

மழைப் பாட்டு

இதற்குக் குறிப்பிட்ட மெட்டு இல்லை, இசைந்தபடி பாடலாம்.

   1. சார மழை பெய்யுதே
     சம்பாக் கோழி கூவுதே
  கூரை மேலே மழைத்தண்ணீர்
  கொள்ளக் கீழே விழுகுதே.
   
   2. காடெல்லாம் வெள்ளம்
     மேடெல்லாம் பள்ளம்
  வீடெல்லாம் சொட்டுச் சொட்டாய்
     விழுந்த நீரும் துள்ளும்
   
   3. மின்னல் எல்லாம் மின்னுதே!
     மேலெல்லாம் குளிருதே
  அன்னை யண்டை அடுப்போரமாய்
     அனலில்குளிர் காயுவேன்
   
   4. சுவரே இடியுதே
     சுக்காங்கல்லும் உருளுதே
  அவரைக்கொடிப் பந்தல் எல்லாம்
     ஆடியாடி அசையுதே
   
   5. குமிழி எல்லாம் பொங்குதே
     கூட்டில்கிளி தொங்குதே
  அமளி செய்த பெருச்சாளி
     ஆடி யோடித் திரியுதே
   
   6. மழைமழை ஓய்ந்து போ
     மடுவெல்லாம் பாய்ந்து போ
  அழகாகத் தெருவெளியே
     அணைகள் கட்டப் போகிறேன்.