பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 93

New Page 1
 

கேள்விக்கு உத்தரவு

   
   3. மூன்று பழங்கள் பறித்தேன் முழுதும் பைக்குள் வைத்தேன்
  ஒன்றைக் காணேன் இன்று ஒளிந்த வகையும் அறியேன்.
   
 

தேடச் சொல்லல்

   
   4. ஒன்றைப் புளித்த நீரில் ஒளித்து ஒன்றைத் தின்று
  ஒன்றைத் தேடிக் கண்டு உடனே வருவாய் இன்று
   
 

தேடிக் கண்டுபிடித்தல்

   
   5. அப்படியே சென்று அங்கும் இங்கும் பார்ப்பேன்
  இப்போ பழத்தைக் கண்டேன் எனது கையிற் கொண்டேன்.

25ஆம் பாடம்

பூனைகளும் பாற்கட்டியும்

நொண்டிச் சிந்து

   1. ஓர்இடைக் குடியிருப்பாம் - அதில்
  உள்ளஇரு பூனைகளும் ஒருதரமாய்
   
   2. திருடிய பாற்கட்டி - இரண்டு
  சிறிதும் பெரியதுமாய் இருந்தனவே
   
   3. எனக்கே பெரியதென்று - பூனை
  இரண்டும் தனித்தனியே முரண்டு செய்து
   
   4. கொடியதோர் குரங்கினிடம் - கொடுத்துக்
  குறையறப் பகிர்ந்திடக் கூறினவே
   
   5. குரங்கோ பெருங்கட்டியைத் - தனது
  கூரிய பல்லாற் கடித்துக் குறைத்துத் தின்று
   
   6. சிறிதைப் பெரிதாக்கி - முன்போலப்
  பெரிதையும் சிறியதாய்ப் பிரித்துண்டது
   
   7. இப்படியே எல்லாம் - தின்று
  ஏப்பமிட்டுக் கொண்டுநன்றாய் இருந்தது பார்
   
   8. இரண்டு பூனைகளும் - இழந்து
  ஏங்கி ஏங்கி இருப்பிடம் ஏகினவே.