அன்று போனான் = அல்லாது போனான். இன்று போனான் = இல்லாது போனான். இதையறியாது, “ அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே” | (நன். 173) |
என்றார் பவணந்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும். பெயரெச்சம் செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று). படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்ச மாகுமென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க. செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும். தொழிற்பெயர் செய்யாத (பெயரெச்சம்) + மை (தொழிற்பெயரீறு) = செய்யாதமை. செய்யா (ஈறுகெட்டது) + மை = செய்யாமை. செய்யாத + அது = செய்யாதது. வினையாலணையும் பெயர் செய்யாத + அவன் = செய்யாதவன் - செய்யாதான். குறிப்புவினை முற்று குறிப்பு வினைமுற்று மூவகையது : (1) பாலீறில்லாத பெயர். கா : அது மரம்; அவன் யார்? (2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல. (3) குறைவினை (Defective Verb). கா : உண்டு, இல்லை. உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே; இப்போது பாற்பொருளிழந்து வழங்குகின்றன.
|