கிளை | : | கிளை = பிரி (வி.), இனம், பிரிவு (பெ.), கிளைவழி. |
கொம்பு | : | கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் கொம்பு - கொழுகொம்பு, விலங்குக்கொம்பு, எழுத்துக்கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு (கிளை பயிர் வளைவதால் தோன்றியவை). |
கோடு | : | கோடு (Stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு. |
இலை | : | மூவிலைச்சூலம், இலைத்தொழில். |
இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம். இலக்கித்தல் எழுதல். |
இலக்கு - இலக்கியம், இலக்கணம். |
பூ | : | பூத்தல் - தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல். |
அரும்பு | : | அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு. மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப்பட்ட பழி. |
கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை) கூம்பு - கூப்பு. |
மலர் | : | முகமலர்ச்சி. மலர்த்தல் - மல்லாத்தல். அலர் = பழி. |
காய் | : | கை காய்த்தல், காய் விழுதல் (abortion). மாங்காய் = குலைக்காய் (heart). |
பழம் | : | பழுத்தல் = முதிர்தல். கா : பழுத்த கிழம். சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும். |
= நிறைதல். கா : “நைவளம் பழுநிய” , பழுத்த சைவன். |
= தண்டனை நேர்தல். கா : 10 உருபா பழுத்து விட்டது. |
பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி. |
இலைப்பழுப்பு. பழுப்பு - பசுப்பு (தெ.). பசப்பு - பசலை. |