|
குறிப்பு : சந்தி என்பது பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் வரும்.
சில வேளைகளில் சந்தி விகாரப்பட்டு வரும். த் வர வேண்டியது ‘ந்’
ஆக விகாரப்பட்டு வரும். இப்படி வருவதைச் சந்தி விகாரம் என்பர்.
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது
சாரியை. ஒவ்வொரு சொல்லிலும் எல்லாம் வரவேண்டுமென்பது இல்லை.
பகுபத உறுப்பிலக்கணத்தில் பயன்
செய்வன், செய்குவன் - இவ்விரண்டு சொற்களும்
சரியானவையே. செய்வன் என்பதில் சாரியை இல்லை; செய்குவன்
என்பதில் கு சாரியை வந்திருக்கிறது.
சொல்லுவார், சொல்வார் - இரண்டில் எது சரி என்னும் ஐயம்
தோன்றும். இரண்டும் சரியானவையே. சொல்லுவார் என்பதில் உகரம்
சாரியை. இப்படி ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு இப்பகுபத
உறுப்பிலக்கணம் மிகவும் பயன்படும் என்பதறிக.
கால வேறுபாடுகள்
தமிழ்மொழியில் பன்னெடுங்காலமாய் இறந்த காலம்,
நிகழ்காலம், எதிர்காலம் என் மூன்று காலங்களே சொல்லப்பட்டு
வருகின்றன. ஆங்கிலத்தில் காலவேறுபாடுகள் காட்டும் சொற்கள்
இருக்கின்றன. அதுபோலத் தமிழில், எழுதுவதிலும், பேசுவதிலும்
கால வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. ஆனால், அவற்றைக்
குறித்து இலக்கணங்கள் கூறுவதில்லை. எனினும், வி.கோ. சூரியநாராயண
சாஸ்திரியார் தமது ‘தமிழ்மொழி வராலாறு’ என்னும் நூலில் இறப்பில்
இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு என்றும்; நிகழ்வில் இறப்பு,
நிகழ்வில் நிகழ்வு, நிகழ்வில் எதிர்வு என்றும்;
எதிர்வு ஒன்றே என்றும்
காலவேறுபாட்டைப் பிரித்துக் காட்டியுள்ளார்.
பெருந்தமிழ்ப் புலவராயும்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராயும் இருந்து மறைந்த
டாக்டர் மு.வரதராசனார் தமது ‘மொழி நூலில்’ இறப்பு, இறப்பில்
|