பக்கம் எண் :

வினையியல் 109


இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு, தொடரும் இறப்பு எனவும்;
நிகழ்வு எனவும், தொடரும் நிகழ்வு எனவும்; எதிர்வு எனவும், தொடரும்
எதிர்வு எனவும் கால வேறுபாடுகளைக் காட்டியிருப்பதைக் காண்கிறோம்.
கால வேறுபாட்டைக் காட்டுவதில் தமிழ் முன்னேற்றம் அடைந்திருப்பதை
அறிக.

இறந்த காலம்

I. எழுதினான் -
எழுதிவிட்டான் -
எழுதியுள்ளான் -
எழுதியிருக்கிறான் -
எழுதியிருப்பான் -
எழுதிக்கொண்டிருந்தான் -
இறப்பு.
இறப்பில் இறப்பு.
இறப்பில் இறப்பு.
இறப்பில் நிகழ்வு.
இறப்பில் எதிர்வு.
தொடரும் இறப்பு.

நிகழ்காலம்

II. எழுதுகிறான் -
எழுதிக்கொண்டிருக்கிறான் -
நிகழ்வு.
தொடரும் நிகழ்வு.

எதிர்காலம்

III. எழுதுவான் -
எழுதிக்கொண்டிருப்பான் -
எதிர்வு
தொடரும் எதிர்வு

இவ்வாறு துணைவினைகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதால்
வினைச் சொற்களில் கால வேறுபாடுகள் தோன்றுவதைக் காண்க.