5.5
இடையியல்
இடைச்சொல் (On Particle)
பெயர் வினைகளைப் போலப் பெரும்பாலும் தனித்து வாராமல்,
அப்பெயர் வினைகளைச் சார்ந்து அல்லது இடமாகக் கொண்டு
வருவது இடைச் சொல்லாகும். இடை - இடம்.
வேற்றுமை உருபுகள், விகுதிகள், இடைநிலைகள், சாரியைகள்,
உவம உருபுகள், சுட்டெழுத்துகள், வினா எழுத்துக்கள், ஏ, ஓ, உம்,
மற்று, கொல், தான், வாளா, சும்மா, அந்தோ, ஐயோ, சீச்சீ, அம்மா,
முன், பின், ஆயினும், இனி, தொறும், தோறும் முதலியன இடைச்
சொற்கள்.
அவனைக்கண்டேன் -
வந்தான் -
செல்கிறான் -
அறிஞன் -
எழுதுநன் -
போகின்றனன் -
தாமரை போன்ற பாதம் -
அப்பலகை, அந்தச் செடி-
வந்தானா? -
நக்கீரன், நப்பிள்ளை. - |
ஐ -
ஆன் -
கிறு -
ஞ் -
ந் -
அன் -
போன்ற -
அ, அந்த-
ஆ -
ந - |
வேற்றுமை உருபு.
விகுதி.
கால இடைநிலை.
பெயரிடைநிலை.
பெயரிடைநிலை.
சாரியை.
உவம உருபு.
சுட்டு.
வினா.
உயர்வுப் பொருளைத்
தருவது. |
இனி ஏகார ஓகார உம்மைகளுள் ஒரு சில மட்டும் தெரிந்து
கொள்வோம்.
|