பக்கம் எண் :

இடையியல் 111


ஏகார இடைச்சொல்

1. பாண்டவருள் தருமனே நல்லவன் - ஏகாரம் - பிரிநிலை.
பிரி்த்துக் காட்டுவதால் பிரிநிலை.

2. பள்ளிக்கூடத்திற்குத் தானே போகிறாய்? - ஏகாரம் - வினா.

3. இவனே இதைத் திருடினான். - ஏகாரம் - தேற்றம். துணிந்து
காட்டுதலால் தேற்றம்.

4. காய்ச்சல் வந்தால் கரும்பே கசக்கும். - கரும்பே என்னும்
சொல்லிலுள்ள ஏகாரம் உயர்வு; இதை உயர்வு சிறப்பு ஏகாரம் என்பர்.

5. நாயே இச்சோற்றைத் தின்னாது - ஏகாரம் - இழிவு சிறப்பு.

ஓகார இடைச்சொல்

1. பிச்சை எடுக்கவோ வந்தான்? - ஓகாரம்

இதில் ஓகாரம் பிச்சை எடுக்க வரவில்லை என்பதை ஒழித்துத்
திருட வந்ததை இசைத்தலால் (கூறுதலால்) இஃது ஒழியசை ஓகாரமாகும்.

2. நீயோ பாடினாய்? - ஓகாரம் - இது வினா ஓகாரம்.

3. நீ செய்வாய்; அவன் செய்வான்; நானோ செய்வேன். -
ஓகாரம் - எதிர்மறை.

4. நாயோ நரியோ இங்கு வந்திருக்கும். - ஓகாரம் - ஐயம். -
(ஐயம் - சந்தேகம்)

உம்மை இடைச்சொல்

1. முப்பது மாணவர்களும் வந்திருக்கிறார்கள். - உம் -
முற்றும்மை. இவ்வகுப்பு மாணவர்களை முழுதும் குறிப்பிடுவதால்
இது முற்றும்மை. முற்றும் காட்டும் உம்மை முற்றும்மை.

2. நாயும் இச்சோற்றைத் தின்னாது. - உம் - இழிவு சிறப்பு.