|
3. குரங்கும் ஏறமுடியாத மரம் - உம் - உயர்வு சிறப்பு.
4. பத்தாயினும் எட்டாயினும் கொடு. - உம் - ஐயம்.
5. அண்ணனும் தம்பியும் வந்தார்கள். - எண்ணும்மை.
எண்ணப்படுவதால் இஃது எண்ணும்மையாகும். ஆங்கிலத்தி
லிருக்கும் and என்பதற்கு இது சமமானது.
6. நீயும் போ, நானும் வருகிறேன். - நீயும் என்பதிலுள்ள
உம்மை எதிரே உள்ள நானும் என்பதைத் தழுவி நிற்கிறது.ஆதலால்,
இஃது எதிரது தழுவிய எச்ச உம்மை, நானும் என்பதிலுள்ள உம்மை,
முன்னே உள்ள அஃதாவது இறந்ததாக உள்ள நீயும் என்பதைத்
தழுவி நிற்பதால், இஃது இறந்தது தழுவிய எச்சஉம்மை.
|