பக்கம் எண் :

134நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


இங்கே வமூஉச் சொற்களுக்கும் திருத்தமான சொற்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.

இருவகையாய் எழுதும் சொற்கள்

இருவகையாய் எழுதும் சொற்களும் உண்டு. அவை வருமாறு:

சுருசுருப்பு
பவளம்
துளை
வியர்வை
கோவில்
யாண்டு
யார்
யாறு
யானை
சாம்பல்
மதில்
பொழுது
எமன்
ஒளவையார்
ஐயர்
சுறுசுறுப்பு
பவழம்
தொளை
வேர்வை
கோயில்
ஆண்டு
ஆர், யாவர்.
ஆறு
ஆனை
சாம்பர்
மதிள்
போழ்து, போது.
யமன்
அவ்வையார்
அய்யர்

இன்னும் சில உள. இவை பல்வேறு இலக்கண விதிகளுள்
அடங்கும். விரிக்கிற பெருகும்.

ஒரு சிலவற்றிற்கு விளக்கம் கூறுவது நலமாகும்.

செல்வது செலவு. தொகுப்பு தொகை.

இராம + நாதன் = இராமநாதன். தேவ + நாதன் = தேவநாதன்.
இப்படி வருவது வடமொழி முறை. இராமன் + நாதன்