என்று தேவன் + நாதன் என்று கொண்டு, இராமனாதன் என்றும்
தேவனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.
எள் + நெய் = எண்ணெய். எள்ளிலிருந்து எடுக்கும் நெய்
என்பது பொருள். மண்ணெண்ணெய், விளக்கெண்ணெய் என்று எழுதும்
போது எண்ணெய் என்பது "Oil" என்று பொருள்படும். காரணப்
பெயர்ப் பொருளை இழந்து விடுகிறது.
வி + நாயகர் = விநாயகர். தமக்கு மேல் தலைவன் இல்லாதவர்
என்பது பொருள்.
செய்யுளில் மட்டும் எல்லாரும் என்பது எல்லோரும் என்று
வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பானது.
ஏமம் + மாறி = ஏமாறி. பாதுகாவலான நிலையிலிருந்து மாறி
என்பது கருத்து.
ஒருவனுக்குப் பெண்பால் ஒருத்தி என்பதே சரியான சொல்.
மோத்தல் - "மோ" பகுதி, "மோப்பக் குழையும் அனிச்சம்" -
90வது குறள்.
ஒரு சிலர் தவறாக வெய்யில் என்று எழுதுகின்றனர். வெயில்
என்பதுதான் சரியான சொல். "வெயில் என் கிளவி மழையியல்
நிலையும்" என்பது தொல்காப்பிய எழுத்ததிகாரம் - 377-ஆம்
நூற்பா. "என்பிலதனை வெயில் போலக் காயுமே" - 77வது குறள்.
பண்ட சாலை என்று எழுதுவது சரியானது. பண்டம் விற்கும் அல்லது
வைத்திருக்கும் சாலை என்பது பொருள். ‘கல இருக்கை - பண்ட சாலை.’
இது சிலப்பதிகார அரும்பத உரையாசிரியரின் உரை - இந்திர விழவூர்
எடுத்த காதை வரி 7-ன் அடிக்குறிப்பைக் காண்க.
பொரும்பாணாற்றுப்படை, பட்டினப் பாலை இவற்றின் நச்சினார்க்கினியர்
உரையிலும் காண்க.
|