உ. வே. சா. பதிப்பு (1974) பக்கம் முறையே 241, 543, ஆகவே பண்டக
சாலை என்பது தவறு.
கேட்கிறார் - கேள் பகுதி. கோக்கிறார் - கோ பகுதி.
சித்திரித்தல் - இது சித்திரம் என்னும் பெயர்ச் சொல்லிலிருந்து
வந்தது.
நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில் குத்தினான்
என்றும் எழுதுக.
புரம் - நகரம்; புறம் - பக்கம். இவ்வேறுபாடுகள் அறிக.
சுவல் என்பதற்குப் பொருள் தோள். தோள் போலப் பளுவைத்
தாங்கி நிற்றலால் சுவல் எனப்பட்டது. சுவல் - சுவர் -ர் கடைப்போலி.
சுவர் + இல் = சுவரில் என்க. சுவற்றில் என்று எழுதினால் அதற்கு
வறண்டுபோன இடத்தில் என்பது பொருளாகும்.
வாயின் இறுதிதான் வயிறு. ஆதலால், வயிறு என்பதே
சரியானது.
வரட்சி என்று ஒரு சில நூல்களில் காணப்படினும் வறட்சி
என்பதே சரியானது. வறு - பகுதி.
‘நீர் அற வறந்த நிரம்பா நீளிடை’ - அகநானூறு - செய் 53-விரி 5.
‘நீர் அற்றுப் போனதால் வறட்சியுற்ற செல்லத் தொலையாத நீண்ட இடம்’
என்பது பொருள்.
‘அறுகய மருங்கில் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல்
போல’ - நீர் வற்றிய கயத்தில் (குளத்தில்) சடையினது கோடைக்
காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல என்பது பொருள். புறநானூற்றுச்
செய்யுள் 75, வரி 9.
அச்சு வருவதற்கு முன் ஆங்கிலத்தில் ஒரு சொல்லை வெவ்வேறு
விதமாக எழுதியதுண்டு. அச்சு வந்தபின் ஆங்கிலத்தில்
|