ஒரே முறையில் எழுதுவது நிலைத்து விட்டது. அது போலத் தமிழிலும்
மொழி நூற்படி இப்படி எழுத வேண்டியமுறை வந்து விட்டது.
கருப்பூரம், கற்பூரம்.
‘கருப்பூரம் நாறுமோ’ - ஆண்டாள் நாச்சியார்
திருமொழி - செய்யுள் - 1.
‘கற்பூரம் நாறும் கலைசையே’. - கலைசைச் சிலேடை வெண்பா.
இதனால், கருப்பூரம் என்றும் கற்பூரம் என்றும் எழுதுவது சரியே.
ஆனால், கருப்பூரம் என்று எழுதுவது நன்று.
வேண்டுவது ஒன்று உண்டு. அதை இன்றே செய்ய வேண்டும்.
இன்னே செய்யவும் வேண்டும்; படக்காட்சியில் தொண்டு செய்பவர்கள்.
நிகழ்ச்சிக் குறிப்பு எழுதுவோரிடம் ‘இன்று மூன்று காட்சிகள்’ என்று
எழுதும்போது ‘காக்ஷி’ என்ற எழுதாமல். ‘காட்சி’ என்று எழுதுமாறு கூறுக.
காண் + சி = காட்சி. இது தூய தமிழ்ச்சொல். எண்ணெய்க் கடையிலும்,
வெண்ணெய்க் கடையிலும் நண்பர்களை எண்ணை, வெண்ணை
விற்க்கப்படும் என்று தவறாக எழுதியிருப்பதை ‘எண்ணெய்,
வெண்ணெய் விற்கப்படும்’ என்று திருத்துமாறு கூறவேண்டும்.
|