7.
விட்டுவிட்ட குப்பை
‘சேர்த்து வைத்த குப்பையில் இது விட்டுவிட்ட குப்பை’
தமிழரசியின் திருக்கோயிலைத் துப்புரவு செய்ய வேண்டுவது நமது
கடமையன்றோ? எனவே, விட்டுவிட்ட குப்பையை விட்டுவிட
மனமில்லாத அதையும் வெளியேற்ற விரும்புகிறேன், இத்தலைப்பின்
கீழ், விடப்பட்ட எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் தரப்படுகின்றன.
சிலர் தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களாய் மாற்றிப்
பேசியும் எழுதியும் வருவதைக் காண்கிறோம். "ஆஷ்டுக்குஷ்டி
வேஷ்டிமேலே ஓஷ்டு ஓஷ்டு" என்றாராம் ஒருவர். இவர் தமிழ்ச்
சொல்லில் ஷ் சேர்த்தால் வடசொல்லாகுமென நினைத்தார் போலும்.
ழகரம் படும்பாடு பஞ்சுதான் படுமோ? சொல்லத்தான் படுமோ?
பாலாற்றங்கரையில் கோழி என்பது கோயி என்றும், பழம் என்பது பயம்
என்றும் மாறுகின்றன. கொள்ளிடக்கரையில் திருவிழா என்பது
திருவிஷாவாக மாறுகிறது. தாம்பரபரணியாற்றங்கரையில் பழம் என்பது
பளமாகவும், குழந்தை என்பது குளந்தையாகவும் மாறுகின்றன. சிறு
வயதிலிருந்தே குழந்தைகளின் உச்சரிப்பில் கவனம் செலுத்தினால்,
எழுத்துப் பிழை ஏற்படுவது நீங்கும்.
பெருவரவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளும்
சொற்பிழைகளும் அவற்றிற்குத் திருத்தங்களும் அடுத்த பக்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தப் பார்த்துத் திருத்தங்களை
அறிந்து கொள்க.
|