பக்கம் எண் :

150நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


8.
செல்லாத காசுகள்

செல்லாத காசுகளை என்ன செய்வது? செல்லாத காசுகளைச்
செல்ல வைக்கலாமா? கூடாது. சிலர் செல்லாத காசுகளை நல்ல
காசுகளுடன் சேர்த்துச் சிற்றுண்டி நிலைய முதலாளியிடம்
கொடுத்துப் பார்ப்பதுண்டு. முதலாளி விழிப்புடையவராயிருந்தால்
"என்ன ஐயா! செல்லாத காசுகளைக் கொடுக்கிறீர்களே! என்னை
ஏமாற்றப் பார்க்கிறீர்களா?" என்று கேட்பார். செல்லாத காசுகளைக்
கொடுத்தவருடைய முகம் இஞ்சி தின்ற இராமதூதர் முகம் போல
மாறிவிடும். வேறு காசுகளைக் கொடுத்துவிட்டு வீடு திரும்புவார்
அவர். வேறு சிலர் செல்லாத காசுகளை மாலை அந்திவேளையில்
இருள் மயங்கும் நேரத்தில் ஏழை மக்களிடம் கொடுத்து ஏமாற்றிப்
பண்டங்கள் வாங்குவதுண்டு. கள்ளம் அறியாத வெள்ளையுள்ளம்
கொண்ட அவர்கள் அக்காசுகளை வாங்கிப் பண்டங்களைக்
கொடுப்பதுடன் மிகுதியான சில்லறையும் தந்து ஏமாற்றமடைவதுண்டு.
திறமை மிக்கவர் செல்லாத காசுகளைக் கண்டு பிடித்து விடுவர்;
ஆனால், ஏழைகளோ நம்பிக்கையால் ஏமாறிப் போகிறார்கள்.
அதுபோல அறிஞர்கள் செல்லாத சொற்களைத் தெரிந்து
கொள்கிறார்கள்; போதிய படிப்பில்லாதவர்கள் தவறான
சொற்களைத் திருத்தமான சொற்களாகக் கருதி ஏமாறிப்
போகிறார்கள், பெரும்பாலான நாள் இதழ்களிலும் வார
வெளியீடுகளிலும், திங்கள் வெளியீடுகளிலும் தவறான சொற்கள்
வருவதைக் காண்கிறோம். அச்சில் வருவதால் பெரும்பாலோர்
அவற்றைத் தவறானவை என்று அறிய இயலாமையால் திருத்தமானவை
என்று எண்ணி அத்தவறான சொற்களைத் திருத்தமானவை என
நம்புகின்றனர். 100க்கு 50