பக்கம் எண் :

154நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

ரொப்பு -

வரேன் -

வராது -

வாத்தியார் -

வாத்திச்சி -

வாய்ப்பாடு -

வாவரசி -

வியாதியஸ்தர் -

நிரப்பு

வாரேன்

வாராது

உபாத்தியாயர்

உபாத்தியாயனி

வாய்பாடு

வாழ்வரசி

வியாதிஸ்தர்

வெங்கட்ராமன் -

வெங்கடாசலம் -

வெண்ணை -

வெத்தலை -

வெந்நீ -

வெய்யில் -

வெள்ளாமை -

வேணும் -

வைக்கல் -
வேங்கடராமன்

வேங்கடாசலம்

வெண்ணெய்

வெற்றிலை

வெந்நீர்

வெயில்

வேளாண்மை

வேண்டும்

வைக்கோல்

ஒருவள் என்னும் சொல்லே இல்லை. ஒருத்தி என்றே எழுத
வேண்டும். ஒருவள் என்று எழுதுவது பெருந்தவறு.

எழுத்தாளர்களும் பிறரும் தவறான சொற்களை நீக்கி
எழுதினால், நாட்டிலே நல்ல தமிழ் பரவும் என்று சொல்லவும்
வேண்டுமோ?