9.
பயன்படுத்தும் பாங்கு
சொற்களைப் பொருளறிந்து இடமறி்ந்து பயன்படுத்த வேண்டும்.
தமிழ் நாட்டில் ஓரு ஊரில் கோயில் நிருவாகி ஓருவர் இருந்தார்.
அவரிடம் தெலுங்கனான ஏவலாள் வேலை செய்து வந்தான்.
கோயில் நிருவாகியிடம் வேலையில் அமர்வதற்கு முன்னமே ஓரளவு
அவன் தமிழ் பேசக் கற்றிருந்தான். இவரிடம் அவன் வந்ததும் தமிழ்
பேச நன்கு பயின்றிருந்தான். ஆனால், எந்தச் சொல்லை எந்த
நேரத்தில் எந்த இடத்தில் ஏற்றவாறு சொல்லுவது என்பது
அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் கோயிலில் திருவிழா நடக்க
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயில் நிருவாகி அடுத்த தெருவிலிருந்த
தம் நண்பரிடம் போக வேண்டியவராயிருந்தார். அவர் ஏவலாளை
நோக்கி, "இராமய்யா, நான் அடுத்த தெருவிலிருக்கும் அய்யாசாமிப்
பிள்ளையவர்களிடம் போகிறேன். சாமிக்கு அபிடேகம் நடந்து
அலங்காரம் செய்து திருவீதி புறப்பாட்டுக்கு ஆயத்தமானதும்
என்னிடம் வந்து சொல். நான் வந்து விடுகிறேன்" என்று சொல்லிச்
சென்றார். அங்ஙனமே திருவுருவத்துக்குத் திருமுழுக்கு, அணி
செய்தல் முதலியன நடந்தன. திருவீதி புறப்பாட்டுக்கு ஆயத்தம்
நடந்துகொண்டு இருந்தது. இராமய்யா கோயில் நிருவாகியிடம் ஓடி,
"ஐயா, கழுவிக் குளிப்பாட்டியாயிற்று; தூக்குவதற்குக் காத்துக்கொண்டு
இருக்கிறார்கள்" என்று பணிவோடு சொன்னான். நண்பருக்கு அதிர்ச்சி
ஏற்பட்டது. அவர், "என்ன ஐயா? யார் இறந்து போனார்?" என்று
வினவினார். கோயில் நிருவாகி, "ஒன்றும் இல்லை, எந்தச் சொல்லை
எந்த இடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று அறியாது இப்படி
இராமய்யா உளறிக் கொட்டினான். சுவாமிக்கு அபிடேகம் நடந்தது;
|