பக்கம் எண் :

160நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சிறுமி என்பதை நன்முறையில் பயன்படுத்துகிறோம்.
இழிமுறையில் சொல்லும் பொழுது சிறுக்கி என்னும் சொல்
சிறுமிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மதுரையில் சடங்கு என்னும் சொல் பெண் மங்கை பருவமுற்றதைப்
பற்றி நடத்தும் நிகழ்ச்சியைக் குறிக்கும். மற்ற இடங்களில் அச்சொல்
கிரியை என்னும் பொருளைக் குறிக்கும்.

ஆதலால், இடமறிந்து பொருளறிந்து சொற்களைத் எழுத்தாளர்
பயன்படுத்த வேண்டும்.

அஃது இல்லை. வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால்
‘அஃது’ வரவேண்டும்.

அது போயிற்று. வருமொழி உயிர்மெய்யெழுத்தில் தொடங்கினால்
‘அது’ வரவேண்டும்.

ஓர் அணா. வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் ‘ஓர்’
வரவேண்டும்.
An anna என்று ஆங்கிலத்தில் பயன்படுத்துவது அறிக.

ஒரு வீடு. வருமொழி உயிர்மெய்யெழுத்தில் தொடங்கினால் ‘ஒரு
வரவேண்டும்
A book என்று ஆங்கிலத்தில் வருவதை ஒப்பிட்டுப்
பார்க்கவும்]. செய்யுளில் இதற்கு மாறுபாடாக இருத்தலும் உண்டு.

வீற்றிருத்தல் என்னும் சொல், பிறருக்கு இல்லாத பெருமையோடு
இருத்தலைக் குறிக்கும். நாய் வீற்றிருந்தது என்பது தவறு புலவர்
அவையில் வீற்றிருந்தார் என்க.

தருதல், வருதல், இங்கு, ஈங்கு இவற்றைத் தன்மையிடத்திலும்
முன்னிலையிடத்திலும் வழங்குவது தொல்காப்பிய மரபு. எனக்குத்
தந்தான், உனக்குத் தந்தான் என்றும், என்னிடம் வந்தான், உன்னிடம்
வந்தான் என்றும், இங்கு வந்தான், ஈங்கு வந்தான் என்றும் எழுதுக.