பக்கம் எண் :

பயன்படுத்தும் பாங்கு

163

கொட்டு முழங்குகிறது.
கடல் இரைகிறது.
அலை வீசுகிறது.
கடல்நீர் கரிக்கிறது.
சிங்கம் காச்சிக்கிறது.
புலி உறுமுகிறது.
யானை பிளிறுகிறது.
பன்றி உறுமுகிறது.
கழுதை கத்துகிறது.
பசு கத்துகிறது.
கன்று கதறுகிறது.
எருமை கத்துகிறது.
குதிரை கனைக்கிறது.
நாய் குரைக்கிறது.
நா¤ ஊளையிடுகிறது.
ஆந்தை அலறுகிறது.
சேவல் கூவுகிறது.
குயில் கூவுகிறது.
மயில் அகவுகிறது.
காக்கை கரைகிறது.
வானம்பாடி பாடுகிறது.
நாகம் சீறுகிறது.
தவளை கத்துகிறது.
வண்டு முரலுகிறது.
ஓவியர் படம் வரைகிறார்.
சிற்பி செதுக்குகிறார்
ஆசிரியர் நூல் எழுதுகிறார்.
கவிஞர் பாடல் இயற்றுகிறார்.
ஓடு போட்டான்.
கூரை வேய்ந்தான்.
வீடு கட்டினான்.
சுவர் வைத்தான்.
குயவன் பானை வனைகிறான்.
ஓலை முடைகிறான்.
சோறு உண்கிறார்.
முறுக்குத் தின்கிறான்.
கூறு போடுகிறான்.
தண்ணீர் குடிக்கிறார்.

பெயருக்கு ஏற்ற வினை

அப்பன் தின்.
கஞ்சி குடி.
இலை பறி.
ஏர் உழு.
கதிர் அறு.
கரும்பூரம் கொளுத்து.
கல் உடை.
கிளையை ஒடி.
காய்களை அரி.
களை பறி.
நார் கிழி.
நீர் பாய்ச்சு.
நெல்லைக் குற்று.
உடம்பில் குத்து.
பழம் தின்.
நீர் பருகு.
பாட்டுப் பாடு.
பால் குடி.
மரம் வெட்டு.
பூக் கொய்.