| 164 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
சந்தனம் பூசு.
சோறு உண்.
தாள் அடி.
பாடல் இயற்று.
தென்றல் வீசும்.
|
விறகு பிள.
நூல் எழுது.
விடை எழுது.
படம் வரை.
அம்பு எய்.
|
துணைவினைகளைப் பயன்படுத்தும் முறை
துணைவினை என்பது வினைச் சொல்லோடு துணயாக வருவது.
இத் துணைவினைகளைப் பயன்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு. கீழே
காண்க :
அருள் - உயர்வு குறித்து வரும்.
காத்தருள்.
இடு - உறுதிப்பாட்டைக் குறிக்கும்.
வேலை முடித்திட்டான்.
இரு - நிலைமையைக் குறிக்கும்
நான் போன போது அவன்
படுத்திருந்தான்.
ஒழி - முழுவதும் இல்லாமையைக் குறிக்கும்.
அவன் கெட்டொழிந்தான்.
கொடு, தா. - பிறருக்குச்
செய்வதைக் குறிக்கும்.
அவனுக்கு வட்டி முழுதும் தள்ளிக்
கொடுத்தான்.
அவனே தன் மகனுக்குப் பாடம்
சொல்லித் தந்தான்.
கொள் - தனக்காகச் செய்வதைக் குறிக்கும்.
அவனே சோறு சமைத்துக் கொள்கிறான்.
போ - ஊற்றமின்மையைக் குறிக்கும்.
அவன் யாதேனும் சொல்லிப் போகிறான்.
வா - வழக்கத்தைக் குறிக்கும்.
நான் படுக்கை விட்டெழுந்ததும்
மூன்று திருக்குறளை நாள்தோறும்
படித்து மனப்பாடம் செய்து வருகிறேன்.
|