|
விடு - செயல் விரைவில் நிகழ்ந்ததைக் குறிக்கும்.
கள்ளன் எல்லாப்
பொருள்களையும் கொண்டு போய்
விட்டான்; காவலாளியைக் கண்டதும் தரையில்
போட்டுவிட்டு
ஓடிவிட்டான்.
வை - இப்பொழுது விட்டிருத்தலைக் குறிக்கும்.
ஓர் ஆண்டாகப் படிப்பை நிறுத்தி
வைத்திருக்கிறேன்.
சொற்களையும் பொருள்
அறிந்து பயன்படுத்த வேண்டும்
கீழ் வருவனவற்றைக் கவனித்துப் படிப்பது பயனளிக்கும்.
| பார்த்தல் - |
வரவை
எதிர்ப்பார்த்தல்,இயல்பாகப் பார்த்தல். |
|
காணல் - |
பெரியவரைப் பார்த்தல |
|
நோக்குதல் - |
குறிக்கோளோடு
பார்த்தல். |
|
கவனித்தல் - |
நுட்பமாகப்
பார்த்தல். |
| -------------------------------------------------- |
|
சொல்லுதல் - |
சுருக்கமாகச் சொல்லுதல். |
|
பேசுதல் - |
நெடுநேரம்
உரையாடுதல். |
|
கூறுதல் - |
கூறுபடுத்திச்
சொல்லுதல். |
|
சாற்றுதல் - |
பலரறியச் சொல்லுதல். |
|
பன்னுதல் - |
திரும்பத் திரும்பச் சொல்லுதல். |
|
கொஞ்சுதல் - |
செல்லமாகச் சொல்லுதல். |
|
பிதற்றுதல் - |
பித்தனைப் போலச் சொல்லுதல். |
|
உளறுதல் - |
ஒன்றுக்கொன்று சொல்லுதல். |
|
ஓதுதல் - |
காதில் மெல்லச் சொல்லுதல். |
|
கழறுதல் - |
கடிந்து சொல்லுதல் |
|
செப்புதல் - |
விடை சொல்லுதல். |
|
மொழிதல் - |
திருத்தமாகச் சொல்லுதல். |
|
இயம்புதல் - |
இனிமையாகச் சொல்லுதல். |
|
விளம்புதல் - |
பலர் அறியச் சொல்லுதல். |
|
வற்புறுத்தல் - |
அழுத்தமாகச் சொல்லுதல். |
|