| அருந்துதல் - |
மிகச் சிறிய
அளவில் உட்கொள்ளுதல்
(மருந்து அருந்தல்). |
| உண்ணல் - |
பசி தீர
உட்கொள்ளல் |
| உறிஞ்சல் - |
வாயைக்
குவித்துக் கொண்டு நீரியற்
பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல். |
| குடித்தல் - |
சிறிது சிறிதாய்ப் பசி நீங்க உட்கொள்ளல்
(கஞ்சி குடித்தல்) |
| தின்னல் - |
சுவைக்காக ஓரளவு தின்னுதல். (முறுக்குத் தின்னல்) |
| துய்த்தல் - |
சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல். |
|
பருகல் - |
நீரியற்
பண்டத்தைச் சிறிது சிறிதாய்க் குடிப்பது. |
| விழுங்கல் - |
பல்லுக்கும்
நாவிற்கும் வேலையின்றித் தொண்டை
வழி உட்கொள்ளல். (மாத்திரை விழுங்கல்) |
|
--------------------------------------------------- |
|
சுவர் - |
மண் அல்லது கல்லால்
அமைப்பது. |
|
மதில் - |
கோயில் அல்லது பெரிய வள
மனைகளுக்குச்
சுற்றிப் போடும் உயர்வான சுவர். |
|
--------------------------------------------------------- |
|
அறிதல் - |
அறிவால் அறிதல். |
|
தெரிதல் - |
பலவற்றுள் ஒன்றைத் தெரிந்து கண்டு கொள்ளுதல். |
|
உணர்தல் - |
உள்ளத்தால் அறிதல். |
|
உய்த்துணர்தல்- |
யூகித்து உள்ளத்தால் காணல். |
| -------------------------------------------- |
|
உடைத்தல் - |
கல்லை உடைத்தல். |
|
ஒடித்தல் - |
கிளையை ஒடித்தல் |
|
நறுக்குதல் - |
துண்டு துண்டாகச் செய்தல். |
|
நொறுக்குதல் - |
பொடியாக்குதல். |
| --------------------------------------------- |