|
அறிஞர் - |
அறிவில் சிறந்தவர். |
| புலவர் - |
புலமையுடையவர். |
|
மேதை - |
பேரறிஞர். |
| -------------------------------------------- |
|
பேச்சாளர் - |
மேடைப் பேச்சில் வல்லவர். |
|
நாவலர் - |
பெரும் பேச்சாளர் (Orator) |
| ----------------------------------------------- |
|
பாவலர் - |
பாக்களை இயற்றுபவர். |
|
கவிஞர் - |
கவி இயற்றுவதில் கருவிலே அமைந்த
திருவுடையார் (Poet). |
| ------------------------------------------- |
| குற்றுதல்
- |
(நெல்) குற்றுதல். |
|
குத்துதல் - |
(கையால் உடம்பில்) குத்துதல். |
|
கொத்துதல் - |
(கோழி) கொத்தித் தின்னல். |
| ---------------------------------------- |
|
கீர்த்தி - |
புகழ். |
|
சீர்த்தி - |
பெரும்புகழ். |
|
ஒளி - |
உயிருள்ளபோது இருக்கும் கீர்த்தி. |
|
புகழ் - |
இறந்தபின்பு ஏற்படுவது. (உண்ணான் ஒளி நிறான்
ஓங்கு புகழ் செய்யான் - நாலடியார் - (செல்வ
நிலையாமை - செய்யுள் - 9) |
| ------------------------------------------------ |
|
கடவுள் - |
முழுமுதற் செழும்பொருள், இறைவன். |
|
கடவுளர் - |
சிறு தெய்வங்கள். |
|
தெய்வங்கள் - |
அச்சத்தால் வணங்கப்படுபவை. |
|
தேவதைகள் - |
கடல்தேவதை, வனதேவதை போன்ற பெண்
தெய்வங்கள். |
|
தேவர்கள் - |
சுவர்க்கத்தில் இருந்து பின்பு மண்ணுலகத்தில்
பிறந்து அதன் பின்பு முத்தியுலகை
அடையக்கூடியவர்கள். |
| ----------------------------------------- |