பக்கம் எண் :

168நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

விறலி - மனத்தினுள் இருக்கின்ற கருத்தின் சுவையைக் கை,
கால்கள் முதலிய வற்றால் தோன்றுமாறு விறல்பட
நடனம் செய்பவள்.
அழகு - அளவு, உடற்கட்டு, நிறம் முதலிய வற்றால்
கண்ணுக்கு அல்லது மனத்துக்கு இனிதாகத்
தோன்றும் தன்மை.
எழில் - எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத்
தோன்றும் அழகு.
தோற்றம் - உடல், உள்ளம், உயிர், பண்பு, அனுபவம் சேர்ந்து
காட்சியளிக்கும் தன்மை.
-----------------------------------------------
மேகம் - முகில்
கார்மேகம் - கரிய நீர் கொண்ட முகில்
-----------------------------------------------
தூவானம் - காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை.
தூறல் - சிறுதுளி மழை.
சாரல் - தூறல்.
மழை - பெருந்துளியாகப் பெய்வது.
சோனாமாரி - விடா மழை.
-------------------------------------------
சினம் - கோபத்தின் பின் சிறிது பொழுது நிற்பது.
சீற்றம் - கோபம் (சீறுவது).
செற்றம் - நெடுங்காலம் இருக்கும் பகைமை.
-------------------------------------------
அழுதல் - வருத்தத்தால் கண்ணீர் விடுதல்.
புலம்பல் - தனிமையால் சிறிது வாய்விட்டு அழுதல்.
அரற்றுதல் - வாய்விட்டு அழுதல், பலவும் சொல்லித் தன் குறை
கூறி அழுதல்.
கதறுதல் - உணர்ச்சியால் வாய்விட்டு உரக்கக் கூறி அழுதல்.
------------------------------------------