|
சிந்துதல் - |
துளித்துளியாகக் கீழே விழுதல். |
|
தெளித்தல் - |
சிறிது சிறிதாகச் சிதறச் செய்தல். |
|
சொரிதல் - |
மேலிருந்து விழுதல். |
|
வார்த்தல் - |
நீளமாகச் சொரிதல் |
|
ஊற்றுதல் - |
விட்டுவிட்டுத் தண்ணீர் விடுதல். |
|
கொட்டுதல் - |
ஒருசேர விடுதல். |
|
வழிதல் - |
மிகுந்து வெளிவருதல். |
| --------------------------------------- |
|
ஐயம் - |
இதுவோ அதுவோ எனச் சந்தேகித்தல். |
|
திரிபு - |
ஒன்றை மற்றொன்றாக நினைத்தல். |
| ------------------------------------------------ |
|
கல்வி - |
கற்பதால் ஏற்படுவது |
|
கேள்வி - |
அறிஞர் கூறுதலைக் கேட்பதால் உண்டாவது. |
|
அறிவு - |
கல்வியும் அனுபவமும் சேர்ந்தது. |
|
தெளிவு - |
விளக்கமாகத் தெரிதல். |
| -------------------------------------------------- |
|
குறி - |
அடையாளம். |
|
குறிக்கோள் - |
குறியாகக் கொள்வது. |
|
குறிப்பு - |
குறிக்கப்படுவது. |
| ------------------------------------------------ |
|
சந்து - |
சிறு தெரு. (Lane) |
|
தெரு - |
சந்தை விடச் சிறிது அளவு
அகன்றிருப்பது. (Street) |
| வீதி - |
நீண்ட
அகன்ற தெரு. |
|
சாலை - |
மிகவும்
நீண்ட வீதி. (High Road) |
| நெடுஞ்சாலை - |
மிக மிக
நீண்ட சாலை. (Trunk Road) |
| ---------------------------------------------------- |