பக்கம் எண் :

170நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

குழு - சிறு கூட்டம். (Committee).
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது. (Meeting)
கும்பல் - முறையின்றிக் குவியல் குவியலாகக் கூடுவது.
-------------------------------------------------
மிக உண்டான்- மிக என்பது வினையெச்சம்.
மிக்க துன்பம்- மிக்க என்பது பெயரெச்சம்.
-----------------------------------------
பசும் பால் - பசுமையான பால்.
பசுப்பால் - பசுவினது பால்.
---------------------------------------------
பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது.
விழா - வெளியிடத்தில் அல்லது கோயில் முதலியவற்றில்
கொண்டாடப்படுவது.
ஆண்டுவிழா, கோயில் விழா, (விழா- விழைந்து
அஃதாவது விரும்பிச் செய்வது.)
-----------------------------------------
அவற்கு - இஃது ஒருமை (அவன் + கு= அவனுக்கு)
அவர்க்கு
அவர்களுக்கு -
பன்மை அல்லது மரியாதைப் பன்மை.
--------------------------------------------------

எழுதுவோர் பலரும் இடம் அறிந்து பொருள் அறிந்து வழுவின்றி
எழுதி நல்ல தமிழை நாட்டில் பரப்புதல் நலம். செய்வீர்களா?