| 172 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
தமிழச் சொற்களையும் கலந்து நூல்களை இயற்றினார்கள்.
இந்த உரைநடையை மணிப்பிரவாள நடை என்பர். மணியும் பவழமும்
கலந்தாற் போன்றிருப்பது மணிப்பிரவாள நடை. கி.பி.14-ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார்,
15-ஆம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர். 18-ஆம் நூற்றராண்டின்
முற்பகுதியில் வாழ்ந்த தாயுமானவர் முதலியோர் தங்களுடைய
பாடல்களில் வடசொற்களை மிகுதியாய்ப் புகுத்தினார்கள்.
கி.பி.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் வடசொல் பெய்து எழுதிய
வழக்கம் பெரிதும் காணப்பட்டது. இஃது அக்கால நிலை.
பேச்சில் ‘ஜ’ பெய்து தமிழ்ச் சொற்களைச் சொன்னால் வடமொழியாய்விடும்
என்று கருதி ஓருவர், "தெவஜப் பிள்ளை ரஜம் வெகு சொகுஜா இருக்கிறது"
என்று சொன்னதாகக் கூறுவர். ஒரு காலத்தில் வட சொல் பெய்து
பேசுவதும் எழுதுவதும் பெருமையாய்க் கருதப்பட்டன. இப்படிச்
செய்து வந்ததால் வடமொழியிலிருந்து தமிழ் பிறந்தது என்று
வடமொழியாளர்கள் தவறாக எண்ணியதோடு, வடமொழி உதவியின்றித்
தமிழ் இயங்காது என்று எண்ணவும் செய்தனர். இக்கருத்து மிகவும்
தவறானது என்று அறிவித்தவர் கால்டுவெல் என்ற ஐரோப்பியர்.
அவர் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூலில் தமிழ் மொழி
வேறு என்று கூறியதோடு, "திராவிட மொழிகளுள் தமிழ் மொழி
ஒன்றே, விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்து இயங்க
வல்லது" என்று எடுத்துக் காட்டினார். வடசொல் உதவியின்றித் தமிழ்
இயங்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்ஙனமிருப்பினும் சில
ஆண்டுகளுக்கு முன் திருமண அழைப்புகளிலும் கோயில் திருவிழா
அறிவிப்புகளிலும் வடசொற்களை நிரம்பப் பெய்து எழுதி வந்தார்கள்.
இப்போது தமிழ்ப் பற்றுள்ளவர்கள் கோயில் நிருவாகத்தில் ஈடுபட்டிருப்பதால்
சில கோயில் அறிவிப்புகள் நல்ல தமிழில் வெளி வருகின்றன. இன்று
திருமண அழைப்புகள் பெரும்பாலான வடசொற்கள் இன்றி
வெளியிடப்படுகின்றன.
|
|
|