|
தமிழ்நாடு 1323-க்குச் சிறிது பின்பு டெல்லி சுல்தான் முகமது-பின்-
துக்ளக் ஆட்சியில் புகுந்தது. தென்னகம் முழுவதுமே துக்ளக்
ஆட்சிக்குட்பட்டு விட்டது. 1327-ல் துக்ளக், டெல்லிப் பேரரசின்
பகுதியாகிவிட்ட மதுரையில் ஜலாலுதீன் அசன்ஷாவை ஆட்சியாளனாய்
நியமித்தான். டில்லி மன்னனுடைய பிரதிநிதியாய் ஆண்டு வந்த
ஜலாலுதீன் அசன்ஷா என்பவன் தென்னாட்டில் உரிமைக் கிளர்ச்சி
ஏற்பட்ட பொழுது முழு உரிமை மன்னனாகி மதுரை நாட்டை
ஆண்டான். மதுரை நாட்டில் முஸ்லீம் ஆட்சி, 1333-லிருந்து 1378
வரையிலும் ஏறக்குறைய 45 ஆண்டுகள் நடைபெற்றது. முஸ்லீம்கள்
தமிழகத்தில் குடியேறினார்கள். இக்காலத்தில் உருதுச் சொற்கள் ஒரு
சில தமிழில் நுழைந்தன.
விஜயநகர வேந்தர் புக்கரின் புதல்வரான இரண்டாம் கம்பணர்
தமிழகத்தின் மீது ஏறத்தாழ 1371-ல் படையெடுத்து வந்து
மதுரையிலிருந்த முஸ்லீம் ஆட்சியை ஒழித்துத் தமிழ் நாட்டை
விஜயநகரப் பேரரசில் இணைத்து விட்டார். தஞ்சையிலும் வேலூரிலும்
செஞ்சியிலும் மதுரையிலும் விஜயநகர வேந்தர்களால் நியமிக்கப்பட்ட
ஆளுநர்களான நாயக்கர்கள் ஆட்சி ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும்
366 ஆண்டுகள் தெலுங்கர் ஆட்சியில் இருந்து வந்தது. இக்காலத்தில்
தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழ்நாட்டில் குடியேறி
நிலக்கிழார்களாயும், படைத்தலைவர்களாயும் இருந்தார்கள். இதனால்,
தெலுங்குச் சொற்களும் கன்னடச் சொற்களும் தமிழில் நுழைந்தன.
தஞ்சையில் கி.பி 1676-ல் நாயக்கர் அரசு ஒழிந்துவிட மராத்திய
ஆட்சி ஏற்பட்டு 1855 வரை நடைபெற்றது. இக்காலத்தில் மராத்தியர்கள்
குடியேறினார்கள். பின்பு ஏற்பட்ட கருநாடக முஸ்லீம் மன்னர்கள்
ஆட்சியில் உருதுச் சொற்கள், தமிழில் மிகுதியாய்ப் புகுந்தன.
ஐரோப்பியர் ஆட்சியில் போர்ச்சுகீசியச் சொற்களும், பிரெஞ்சுச்
சொற்களும், ஆங்கிலச் சொற்களும் தமிழில் நுழைந்தன. புதிய
நாகரிகத்தாலும் புதிய
|