பக்கம் எண் :

நெல்லோடு கற்கள் 187


வாழ்க்கையாலும் புதிய ஆட்சி முறையாலும் புதுக்கல்வி முறையாலும்,
புதுப்பொருள் புகுந்தமையாலும் அயல்நாட்டினர் கூட்டுறவாலும்
பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் நாம் விரும்பாமலே வந்தேறின.
நாம் விரும்பி ஏற்றுக் கொண்டனவும் சில உண்டு.

வடசொற்களைத் தவிரப் பிற மொழியிலிருந்து தமிழில் புகுந்த
சொற்களைத் திசைச் சொற்கள் என்பர். இக்காலங்களில் தமிழில்
நுழைந்த பிறமொழிச் சொற்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

போர்த்துக்கீசியச் சொற்கள்

அலமாரி, கிராம்பு, சாவி (திறவுகோல்), ஜன்னல் (காலதர்-
காற்றுவழி), பாதிரி (கிறிஸ்தவ சமயத் தொண்டர்).

தெலுங்குச் சொற்கள்

தெலுங்கு
அப்பட்டம்
ஆஸ்தி
எக்கச்சக்கம்
ஏடாகூடம்
ஏராளம்
ஒய்யாரம்
கச்சிதம்
கெட்டியாக
கெலிப்பு
கேப்பை
சந்தடி
சரக்கு
தமிழ்
கலப்பில்லாதது
செல்வம்
மிகுதி
ஒழுங்கில்லாமை
மிகுதி
குலுக்குநடை
ஒழுங்கு
உறுதியாக
வெற்றி
கேழ்வரகு
இரைச்சல்
வாணிகப்பொருள்
தெலுங்கு
சாகுபடி சொகுசு
சொச்சம்
சொந்தம்
சோலி
தாராளம்
தாறுமாறு
துரை
தெம்பு
தெம்மாண்டி
தொந்தரவு
தமிழ்
பயிரிடுதல்
நேர்த்தி
மிச்சம்
உரிமை
வேலை
மிகுதி
ஒழுங்கின்மை
பெரியோன்
ஊக்கம்
அறிவற்றவன்
தொல்லை