|
அயல்மொழிச் சொற்களுள் ஒருசிலவே மேலே தரட்பட்டன,
பேச்சு வழக்கில்
சென்னையைவிட மிகுதியாக மதுரையில் தெலுங்குச் சொற்களும் அரபுமொழிச்
சொற்களும் தமிழில் கலக்கப்படுகின்றன, சென்னையில்
இவற்றோடு மிகுதியாகக்
கலப்பவை ஆங்கிலச் சொற்களே,
பிறமொழிச் சொற்களை அளவுகடந்து
புகுத்துவது தமிழின் இனிமையைக்
கெடுக்கும், மொழி வளர்ச்சிக்குப் பிறமொழிச்
சொற்களைப் புகுத்தவேண்டும்
என்பது தமிழ் மொழிக்கு ஏற்றதாகாது, உலகப் பேரறிஞர்
ஜவஹர்லால்
நேரு அவர்கள் பிறமொழிச் சொற்களைப் புகுத்தி
இந்தி மொழியை வளர்க்குமாறு
கூறினார்கள், அவர் கூறியது வளர்ச்சியில்லாத அண்மையில்
தோன்றிய இந்தி
மொழிக்குப் பொருந்தும், அது தமிழுக்கு முற்றும்
பொருந்தாது, இன்றியமையாத
சொற்களை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு நம் முன்னோர்கள் ‘திசைச்சொல்’
என்று ஒரு பாகுபாடு செய்து வைத்தார்கள், அவர்களுடைய
பேரறிவை
எண்ணும்போது நாம் வியப்படையாமல் இருத்தல் இயலாது,
அதனால்,
அவர்கள் சில அயல் மொழிச்சொற்களை ஏற்றுக்கொள்ள
இடமளித்தார்கள்
என்பது தெளிவு என்றாலும் இக்காலத்தில் ஏற்பட்டுள்ள புதுப்பொருள்கள்
எல்லாவற்றிற்கும் தமிழ்ச்சொல் கூறுவது இயலாது,
பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்குத்
தமிழ்ச்சொல் கூறுவது இயலுமா? எவர்
சில்வர் என்பதற்கு மாறா வெண்கலம் என்று கூறினால்
விற்பனையாளர்க்கு
விளங்குமா? ஐஸ்கிரீம், புரூட்சாலட் (Fruit Salad) கிராம், கிலோ,
மீட்டர்,
ஈருருளை வண்டி, உந்து வண்டி இவற்றின் பகுதிகள், ‘வான்’ (Van) முதலிய பல நூற்றுக்கணக்கான சொற்கள் நமது புதிய நாகரிக வாழ்வில் புகுந்தவை, இவற்றிற்குப் புதுச் சொற்கள் சொல்வது அரிதினும் அரிது, ரப்பர் மரத்துப் பாலையும் கந்தகத்தையும் சேர்த்துச் செய்வது வல்கனைட்
எனப்படும், அதை வல்கனைட் என்றுதான் சொல்லவேண்டும், ரப்பர் கூட்டால் செய்யப்படுவன மென்மையுடையனவாகவும் இருக்கும், வன்மையுடையனவாகவும் இருக்கும், ரப்பர் செருப்பு இருக்கிறது, தோல் செருப்பும் இருக்கிறது, பூட்ஸ் என்னும் ஒருவகைக் காலணியைப் பூட்ஸ் என்றே கூறுகிறோம், ரப்பர் செருப்பை இரப்பர் செருப்பு என்றாலே யாசிப்பவர் செருப்பு என்று பொருள்படும், கொக்கோ. காப்பி முதலியவற்றை அப்படியேதான் சொல்லவேண்டும்; அப்படியேதான் சொல்லி வருகிறோம், ‘டீ’யை ஆங்கிலேயர் ‘தே’ என்று ஒலித்தனர், அதனால் தேநீர் (Tea) என்பது வழக்கில் வந்தது, இதைத் தேனீர் என்று எழுதினால் தேன் நீர் என்று அச்சொல் பொருள்
தந்துவிடும்,
கோஸ் என்னும் பிறமொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்தி வருகிறோம்,
முருங்கை என்பது முருங்கா என்னும் சிங்களச் சொல்லாம், அதை முருங்கை
என்று பயன்படுத்தி வருகிறோம், முருங்கை தமிழ் இலக்கியத்தில் இல்லை,
சாக்லைட். சூயுங்கம், ஆப்பிள் முதலியவற்றை அப்படியே
பயன்படுத்திவருகிறோம், கோல் என்னும் சொல் விளையாட்டை
வருணிக்கும்போது கூறப்படுகிறது, ஆனால். உருளைக்கிழங்கைப்
பயன்படுத்திய காலத்திலேயே அதன் வடிவத்தால் உருளைக்கிழக்கு என்று
மக்கள் அதற்குப் பெயரிட்டுவிட்டார்கள், அதனால் அதற்குத் தமிழ்ப்
பெயர் வழங்குகிறது,
மேலும். இன்று நாம் தின்னும் பல பண்டங்களுக்குப் பிறமொழிப்
பெயர்களே வழங்குகின்றன,
|