|
ஆனால். சில கடைகளில் கறார் விலை என்று எழுதியிருப்பதைக்
காண்கிறோம், அதனை ஒரே விலை என்று எழுதலாம், ஜலம். போஜனம்.
ரோட் என்று எழுதுவது கூடாது, இப்படி எழுதினால் தமிழ்ச் சொற்களே
மறைந்துவிடும், விளங்காத இடத்திலே வேறு சொல்ல
இயலாத இடத்திலே
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்,
இதற்காகவே நம் முன்னோர்கள் திசைச் சொற்கள் என்று ஒருவகைப் பெயரைத்
தங்கள் கூரிய மதியால் அமைத்திருக்கிறார்கள், 60 வாட் என்பதை
வேறுவகையாகக் கூற இயலாது, அறிவு வளர வேண்டுமென்றால்
இன்றியமையாத இடங்களில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த
இசையவேண்டும், மொழி மக்களிடம் இருக்கிறது, அவர்கள் எழுதுவதைத்
தடுக்க இயலவில்லை, ஓரளவு தடுக்கலாம், அளவு கடந்து தடுத்தால் அறிவு
வளராது, எதிலும் தூயதமிழ் வரவேண்டும், அதனால் நாம் நடுவழி மொழிக்
கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் தவறாகாது,
எனினும். அதே நேரத்தில் அயல்மொழிச் சொற்களை அளவு கடந்து
தமிழில் கலந்துவிட்டால், தமிழே வேறொரு புதுமொழிபோல உருவாகிவிடும்; நாளடைவில் மறைந்துபோகும் நிலையை அடைந்தாலும் அடையும், இப்படி
அயல் மொழிச்சொற்கள் மிகுதியாய்க் கலந்து மறைந்த மொழிகளும்
உண்டு,
ஐரோப்பாவில் அர்மீனிய மொழியும் (Armenian) ரஷ்ய மொழியும்
கலக்கத்
தொடங்கியது போது. அர்மீனிய மொழி மறைந்ததாம், இவ்வாறே
இங்கிலாந்தில் கெல்ட்மொழி ஆங்கில மொழிக்கலப்பால் அழிந்ததாம்,
பிறமொழிக் கலப்பால் மலையாளமும் ஆங்கிலமும் புதுச்சொற்களை
உண்டாக்கும் ஆற்றலை இழந்துவிட்டதாக மொழி நூலறிஞர்கள்
குறிப்பிடுகிறார்கள், பிறமொழிக் கலப்பினால்
தமிழ்மொழி அழியாவிடினும்
புதுச்சொற்களை உண்டாக்கும் ஆற்றலை இழந்துவிடும்,
எனவே.
இடமறிந்து நிலையறிந்து இன்றியமையாத பிறமொழிச் சொற்களை மட்டும்
கலந்து நல்ல தமிழ் எழுத முற்பட வேண்டும் என்றறிக,
|