பக்கம் எண் :

196நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

12, கலைச் சொற்கள் சில

பிரயாணம், செய்திப் போக்குவரத்து ஆகியவற்றால் 24,000 கல்
சுற்றளவுள்ள பெரிய உலகம் இன்று சிறிய இடம்போலச் சுருங்கிவிட்டது,
நேரத்தைச் சுருக்கவும் தூரத்தைக் குறைக்கவும் மானிடம் செய்துவந்த முயற்சி
வெற்றி பெற்றுவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் புது வாழ்வு தொடங்கிவிட்டது,
புது நாகரிகப் பொருள்களும் கண்டுபிடிப்புகளும் புதுமுறைகளும் ஒவ்வொரு
நாட்டிலும் புகுந்துள்ளன, நம் நாடும் புது வாழ்வைத் தொடங்கி நடத்திவருகிறது,
நம் நாட்டிலும் அயல்நாட்டுப் பொருள்களும் ஆட்சிமுறைகளும் பிற பொருள்களும்
வந்து புகுந்து நமது வாழ்வை மிகவும் வளப்படுத்தியுள்ளன, புது நாகரிக
வாழ்வு புகுந்திருப்பதால் நமது தமிழ் மொழியிலும் புதுப் பெயர்களும்
புதுச்சொற்களும் புகுந்துள்ளன,

“தமிழ்மொழி வளம் மிக்க மொழி, வளமிக்க தமிழ் மொழியில்.
ஆக்கும் ஆற்றல் மிக்க தமிழ் மொழியில் அயல் நாட்டுக் கலைச்சொற்களை
அவ்வண்ணமே ஏற்றுக்கொள்வதா? அவற்றை மொழி பெயர்த்து அமைத்துக்
கொள்வதா? அது முடியுமா?” என்ற வினாக்கள் எழுந்த வண்ணம்
இருக்கின்றன, பிறமொழி உதவியின்றி அறவே நம் மொழி நடவாது என்று
தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் சொல்வது முடியாது, எனினும். மிக
உயர்ந்த கலையறிவில் அவ்வாறு செய்வது மிகக்கடினமாகும், நடை
முறைக்கு வேண்டிய நிலையில் தமிழ்க்கலைச்சொற்களைப்
பயன்படுத்துவதில் எந்தவிதத் தொல்லையும் இல்லை, பொதுமக்கள்
எளிதாக அக்கலைச்சொற்களைப் புரிந்து கொள்ள முடியும்,

ரப்பரை ரப்பர் என்றே எழுத வேண்டும், இகரம் சேர்த்து இரப்பர்
என்று எழுதினால் ‘பிச்சையெடுப்பர்’ என்று பொருள்பட்டுவிடும், ரப்பர்
மரத்தின் பாலைக் கொண்டு பல பொருள்கள் செய்யப்படுகின்றன,
எழுதியதை அழிப்பதற்குப் பயன்படுவது. ரப்பரால் செய்யப்படுவனவற்றுள்
ஒன்று, எனவே. ரப்பரைத் துடைப்பான் என்பது தவறாகும், ‘வல்கனைட்’
என்று ஒரு பொருளுண்டு, இது ரப்பராலும் கந்தகத்தாலும் ஆன பொருள்,
இதை ‘வல்கனைட்’ என்றே சொல்லவேண்டும், பென்சிலை (Pencil)ப்
பென்சில் என்றுதான் குறிப்பிட வேண்டும், அதை வேறு எப்படிச் சொல்வது?
கொக்கோவை ‘கொக்கோ’ என்றுதான் சொல்லவேண்டும், ஆப்பில் பழத்தை.
ஆப்பில் என்றுதான் குறிப்பிட முடியும், பெட்ரோலைக் கல்லெண்ணெய்
என்று சொன்னால் விளங்குமா? எனவே. நடுவழி மொழிக்கொள்கை
முறையில் கூடியமட்டும் ஏற்கக் கூடியனவாகவும் எளிதில் விளங்கக்
கூடியனவாகவும் உள்ள வகையில் கலைச்சொற்களைப் பயன்படுத்துவது
சாலப் பொருத்தமாகும்,

இந்நூலில் சில கலைச்சொற்களும் சில தமிழாட்சிக் சொற்களும்
தரப்பட்டுள்ளன, அவற்றைச் சிந்தித்துப் பார்த்துத் தக்கனவாயின்
ஏற்றுக்கொள்க,

மருத்துவத் தொடர்பானவை

Hospital - மருத்துவமனை.
Dispensary - மருந்தகம்.
Clinic - தனி மருத்துவ உதவிமனை.
Nursing Home - தனியார் மருத்துவமனை.
Maternity amp; Child Welfare Centre - தாய் சோய் நல விடுதி.
Maternity Hospital - மகப்பேறு மருத்துவமனை.
Maternity Home - மகப்பேறு விடுதி. ஈனில் (ஈன்+இல் - குழந்தையை ஈனும் இடம்)
Family Planning - குடும்ப நலத்திட்டம்.
Veterinary Dispensary - கால்நடைமருத்தகம்.