பக்கம் எண் :

200நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


Inaugural Address - தொடக்க வாழ்த்துரை.
Farewell Address - வழியனுப்பு வாழ்த்துரை. விடை கோடல் வாழ்த்துரை.
Valedictory Address - முடிப்பு வாழ்த்துரை.
Stipend - பயிற்சி உதவிப் பணம்.
Scholarship - படிப்புதவிப் பணம்.
Hostel - மாணவர் விடுதி, உண்டுறை விடுதி.
Warden - விடுதிக் காப்பாளர்.
Intermediate Class - இடைக்கலை வகுப்பு.
B.A. Class - இளங்கலை வகுப்பு.
Bachelor of Arts - இளங்கலைஞர்.
M.A.Class - முதுகலை வகுப்பு.
Master of Arts - முதுகலைஞர்.
Laboratory - ஆய்வுக் கூடம்.
Field Work - களப்பணி.
Field Research - கள ஆய்வு.
Ph.D. - பண்டாரகர்.
Convocation - பட்டமளிப்பு விழா.
National Cadet Corps - தேசிய மாணவர் படை.
Attendance Register - வருகைப் பதிவேடு.
Administrative Report - ஆட்சி அறிக்கை.
Progress Report - மாணவர் கல்விநிலை அறிக்கை.
Curriculam - பாடத் திட்டம்.
Diagram - விளக்கப் படம்.

வாணிகத் தொடர்புடையவை

Zero - சுழி.
Trade and Commerce - வாணிகமும் பெருவாணிகமும்.
Firm - கூட்டுக்கடை, கூட்டகம்.
Shop - கடை.
Company - கூட்டு வாணிகக் கழகம், கூட்டமைப்பு.
Demand - தேவை.
Supply - வரத்து, வழங்கல்.
Market - விற்பனையிடம், விற்பனைக்களம்.
Procurement - கொள்முதல்.
Bank - வங்கி, வைப்பகம்.
Calculator - கணிப்புப் பொறி.
Investment - முதலீடு.
Credit - வரவு, கடன் பொறுப்பு விற்பனை.
Debit - பற்று.
Cash Book - பணக் குறிப்பேடு.
Cheque - காசோலை.
Mortgage - ஒற்றி வைத்தல், அடகு வைத்தல்.
Creditor - கடன் கொடுத்தவர்.
Debtor - கடன் வாங்கியவர்.
Current Account - நடப்புக் கணக்கு.
Saving Account - வைப்புக் கணக்கு.
Deposits - வைப்புத் தொகை.
Fixed Deposits - தவணை வைப்புத் தொகை.
Co-operative Bank - கூட்டுறவு வங்கி.
Life Insurance - உயிர் ஈட்டுறுதி.
Reserve Bank of India - இந்தியப் பேரரசு வங்கி.
Accountant - கணக்கர்.
Accountant General - மண்டலக் கணக்கர்.
Assessment - வரி விதிப்பு, மதிப்பீடு, தீர்வை.
Audit - தணிக்கை.
Auditor - தணிக்கையாளர்.
Auditor General - தலைமைத் தணிக்கையாளர்.
Balance - மிச்சக் கையிருப்பு.
Bill - பட்டியல்.
Budget - வரவு செலவுப் பட்டியல்.
Budget Estimate - வரவு செலவு மதிப்பீடு.
Cashier - பொருட் பொறுப்பாளர்.
Treasurer - பொருட் காப்பாளர்.